Tamil Qualifying test for TNPSC

தமிழ் மொழி தகுதித் தேர்வு | பாடத் தேர்வு முறை

03.12.2021தேதியன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது அவற்றின் விவரங்கள் பின்வருமாறு.

குருப் 1, 2 தேர்வு முறை | விவரித்து எழுதும் தேர்வு வகைகள்:

முதல் நிலைத் தேர்வு 200 கேள்விகள் இடம் பெறும்

முதன்மைத் தேர்வில் மட்டுமே தகுதித் தேர்வாக மொழிப்பாடம் இருக்கும்

குருப் 4 | வீ ஏ ஓ:

பொது ஆங்கிலம் நீக்கப்பட்டது , தமிழ் மொழிப்பாடம் 100 கேள்விகள் , பொது அறிவு 100 கேள்விகள் இதில் தமிழ் பாடம் தகுதித் தேர்வாகவும் , மதிப்பீட்டுத் தேர்வாகவும் இருக்கும்.

இதர தேர்வுகள்:

சிறப்பு வகைத் தேர்வுகள் அதாவது, இந்து சமய அற நிலையத் துறை செயல் அலுவலர் , பொறியியல் தேர்வுகள் போன்றவற்றில் தமிழ் தகுதித் தேர்வாக மட்டுமே சேர்க்கப்படும்

Group 4 New Pattern:

( 1 ) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் , பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு , பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் .

( 2 ) அதாவது , தொகுதி III , IV போன்ற ஒரே நிலை கொண்ட ( Single stage Examination ) தேர்வுகளுக்கு , தமிழ்மொழித் தாளானது , தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக ( Tamil Eligibility Cum Scoring Test ) நடத்தப்படும் .

இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு
பகுதி -அ என கொள்குறி வகையில் ( Objective’Type ) அமைக்கப்படும் .

( 3 ) பொது அறிவு . திறனறிவு ( Aptitude ) . மனக்கணக்கு நுண்ணறிவு ( Mental Ability ) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி – ஆ என கொள்குறி வகையில் ( Objective Type ) நடத்தப்படும் .

( 4 ) பகுதி- அ – வில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி ( Minimum Qualifying Marks ) பெற்றால் மட்டுமே பகுதி ஆ – வில் எழுதிய தேர்வுத்தாளும் / இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும் .
( இந்த POINT REDUNDANT )

( 5 ) இவ்விரண்டு பகுதிகளின் ( பகுதி அ மற்றும் ஆ ‘ ) அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் .

இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் எந்த தேர்வு இருக்கும் இந்த தமிழ் மொழிப் பாடத்தை முதன்மை தகுதித் தேர்வாக நடத்தும் வழிமுறைகளை பின்பற்றப்படும் எனவே அனைவரும் தமிழ் திறனை வளர்த்துக்கொள்ள நீண்ட நேரம் செலவிடும் மாறும் தமிழ் மொழியினை நன்கு கற்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் நன்றி மேலும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: