TNPSC annual planner 2022 PDF download

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்விற்கான 2022 ஆம் ஆண்டிற்கான Annual Planner எனப்படும் ஆண்டு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.

மேலும் தேர்வர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு தேர்வான குரூப் 2 மற்றும் 2a தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகள் மார்ச் மாதம் வெளியாகும் எனவும் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள் மார்ச் மாதம் வெளியாகும் எனவும் சிவில் ஜட்ஜ் தேர்வுகள் மே மாதம் வெளியாகும் எனவும் குரூப்-1 தேர்வுகள் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் அறிவித்தார்.

இந்த ஆண்டு திட்ட அட்டவணை annual planner இன் நன்மைகள் யாதெனில் போட்டித் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு திட்ட அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும் ஏனெனில் போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எந்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேர்வில் அறிவிப்பு வெளியாகும் என தெரிந்துகொள்ளலாம் எனவே தேர்வர்கள் முன்கூட்டியே தான் எழுதவிருக்கும் தேர்வின் அறிவிப்பு தேதியினை தெரிந்துகொள்ள முடியும் எனவே அவர்கள் தேர்விற்கு மிகவும் எளிதாக தயாராக முடியும் மேலும் இந்த ஆண்டு திட்ட அட்டவணை என்பது சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறுபடும் எனவே காலிப்பணியிடங்களுக்கு தகுந்தவாறு தேர்வாணையம் முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட நிறைய வாய்ப்பு உள்ளது எனவே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நன்கு படித்து தங்களை தயாராக்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் இந்த இணையதளத்தில் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் மிகவும் நிறைய பிடிஎஃப் மெட்டீரியல்கள் பகுதி வாரியாக பிரித்து தரப்பட்டுள்ளது அதனால் தேவர்கள் அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் வாழ்க! வளர்க!!

Click here to download TNPSC annual planner 2022 PDF

மேலும் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் யாதெனில்

குரூப் 1 தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் மற்றும் முதன்மைத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறும் குரூப்-2 மாற்றப்பட்ட பாடத்திட்டம் ஓரிரு வாரங்களில் வெளியீடு செய்யப்படும் தேர்வு அறிவிப்புக்கு முன்னர் மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும் வினாத்தாள் பெட்டிகளில் ஒருமுறை லாக் சிஸ்டம் அறிமுகம் செய்யப்படுகிறது இவையே இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அம்சங்களாகும்.

மேலும் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள் மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் குரூப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களும் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்கள் காலியாக உள்ளன மேலும் 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தேர்விற்கும் அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும் மற்றும் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் இதனால் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன முறைகேடுகளை தடுக்க ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம் இனி தேவை முடிந்த பின் தனியாக பிரித்து எடுக்கப்படும் ஆகையால் ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை பார்த்தே பாதி வழியில் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் திரு பாலச்சந்திரன் அவர்கள் இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: